மைசூருவில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

மைசூருவில் கஞ்சா விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-25 18:45 GMT

மைசூரு:

மைசூரு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மைசூரு டவுன் கவுசியா நகர் பகுதியைச் சேர்ந்த ரியாஜ் பாஷா(வயது 24), விஜயநகர் 3-வது ஸ்டேஜ் பகுதியைச் சேர்ந்த ஹாரிஸ்(28), மண்டி மொகல்லா பகுதியைச் சேர்ந்த சையது அராபத் பகாத்(28) மற்றும் தலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன்குமார்(26) ஆகிய 4 பேர் ஆவர். அவர்களிடமிருந்து 47 கிலோ கஞ்சா, கஞ்சா செடிகள், ஒரு கார், 6 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்