ஒடிசாவில் 3,425 மணல் லட்டுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை...!

ஒடிசாவில் 3,425 மணல் லட்டுகளால் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-31 11:26 GMT

ஒடிசா,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒடிசாவில் பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி மிகப் பெரிய மணல் லட்டு விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார்.

இந்த சிலை செய்ய பூக்கள் மற்றும் 3,425 மணல் லட்டுகளை சுதர்சன் பட்நாயக் பயன்படுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்