சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்க வேண்டும்; கலெக்டர் ரமேஷ் உத்தரவு

சிக்கமகளூரு மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்க வேண்டும் என கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-24 14:58 GMT

சிக்கமகளூரு;


வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையான முறையில் நடந்த நிலையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ், விநாயகா் சிலையை தயாரிப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் வருகிற 31-ந்ேததி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும்போது அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத வகையில் தயாரிக்க வேண்டும். விநாயகர் சிலைகளுக்கு பயன்படுத்தும் வண்ணங்கள் தண்ணீரில் உடனடியாக கரையும் வகையில் இருக்கவேண்டும்.

மேலும் விநாயகர் சிலைகளை ஆறு, குளங்களில் கரைக்கும்போது அந்த வகை வண்ணங்களால் நீர்வாழ் உயிரினமான மீன்கள் மற்றும் தண்ணீர் குடிக்கும் கால்நடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு இருக்கவேண்டும். ரசாயன கலவையால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை விற்பனை செய்ய கூடாது. இல்லையென்றால் சம்பந்தப்பட்ட சிலை தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்