மங்களூருவில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்
மங்களூருவில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
மங்களூரு;
நாடு முழுவதும் நேற்று காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கர்நாடகத்திலும், மங்களூரு, சிக்கமகளூரு, சிவமொக்கா, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இதில், பல்வேறு பகுதிகளில் காந்தியின் சிலை, உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் டவுன்ஹால் பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த காந்தி ெஜயந்தி விழாவில், கலெக்டர் ராஜேந்திரா, மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ், நளின்குமார் கட்டீல் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து மங்களூரு நகரில் சீர்மிகு நகர திட்ட பணிகளை வேதவியாஸ் காமத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.