இடுக்கியில் முழு அடைப்பு போராட்டம் - ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இடுக்கி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
திருவனந்தபுரம்,
தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை சுற்றியுள்ள இடங்களை, ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் முழுவதும் இன்று (ஜூன்10) முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி இடுக்கி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.