இலவச திட்ட வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் - விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இலவச திட்ட அறிவிப்புகளாக கருத முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Update: 2022-08-26 06:28 GMT

புதுடெல்லி,

இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதை முறைப்படுத்த கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

இது தொடர்பான விரிவான உத்தரவுகளை இன்று முதல் முறையாக நேரலை செய்யப்பட்ட விசாரணையில் தலைமை நீதிபதி பிறப்பித்தார். அப்போது இந்தியா போன்ற தேர்தலை அடிப்படையாக கொண்ட ஜனநாயக நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை வாக்காளர்கள் தான் முடிவு செய்கிறார்கள் என்றும் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இலவச திட்ட அறிவிப்புகளாக கருத முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்