ஏழை மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம் - கேரள அரசு முடிவு
கேரளாவில் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில, இலவச பஸ் பயணம் அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில, இலவச பஸ் பயணம் அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரள மாநில அமைச்சரவை கூட்டம், முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில வசதியாக அரசு பஸ்களில் இலவச பயணம் வழங்க முடிவு செய்யப்பட்டது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் படிக்க வசதி, நிலமற்ற மற்றும் வீடு இல்லாத ஏழைகளுக்கு, நிலம் மற்றும் வீடு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.