தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.5½ லட்சம் மோசடி

முகநூலில் வங்கி விவரங்களை பதிவு செய்ததால் தனியார் நிறுவன பெண் ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5½ லட்சத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.

Update: 2022-11-25 18:45 GMT

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் உப்பள்ளி நகரில் உள்ள கொப்பிகார் ரோட்டில் பணி புரிந்து வருபவர் பிரீத்தி. தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூல் (முகநூல்) பக்கத்தில் கணக்கு தொடங்கினார். ஆனால் அதன்பிறகு முகநூலை அவர் பயன்படுத்தாததால் அவரது முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் முகநூல் கணக்கை அவர் புதுப்பித்தார். அப்போது பல்வேறு விவரங்கள் கேட்டது. அப்போது அந்த விவரங்களை பிரீத்தி பதிவு செய்தார். அப்போது அவரது வங்கி கணக்கு விவரங்களையும் முகநூலில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது முகநூல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில், பிரீத்தியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5.57 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கிக்கு சென்று கேட்டார். அப்போது வங்கி விவரங்கள் மூலம் மர்மநபர்கள் பணத்தை மோசடி செய்ததை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர், உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்