அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 120 பேரிடம் ரூ.2½ கோடி மோசடி; பெண் உள்பட 4 பேர் கைது

மங்களூருவில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 120 பேரை ஏமாற்றி ரூ.2½ கோடி மோசடி செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-24 14:50 GMT

மங்களூரு;

அரசு வேலை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்வதாக மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன்படி கடந்த 18-ந்தேதி வரை சுமார் 120 பேர் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் ஏமாற்றி ரூ.2½ கோடி வரை பணமோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து குற்றப்பிரிவு ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து மோசடி கும்பலை வலைவீசி தேடிவந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் பண மோசடி வழக்கில் 4 பேரை குற்றப்பிரிவு ேபாலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் முக்கிய குற்றவாளியான ராம்பிரசாத் ராவ் என்ற ஹரிஷ், புத்தூர் தாலுகா பல்நாடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் பூஜாரி (வயது 41), அலப்பேபடீல் பகுதியை சேர்ந்த சந்திராவதி (36), மற்றும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி தொட்டதோகுரு பகுதியில் வசித்து வந்த சுரேந்திர ரெட்டி (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் 4 பேரும் சேர்ந்து மங்களூருவில் பல நபர்களிடம் நந்தினி பால் நிறுவனம், எம்.ஆர்.பி.எல். ேபான்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் பெற்று கொண்டு மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

இதுவரை 120 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2½ கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்