சிகிரெட் வாங்க ரூ. 10 தராததால் ஆத்திரம் - சிறுவனை கொன்ற 4 பேர் கும்பல்
சிகிரெட் வாங்க ரூ.10 தராததால் ஆத்திரடைந்த கும்பல் சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
புதுடெல்லி ஆனந்த் பார்பட் பகுதியை சேர்ந்த டெய்லர் சோனு (20). இவர் தனது நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசிகொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த விஜய் என்ற சிறுவனை சோனு இடைமறித்துள்ளார். மேலும், சிறுவன் விஜயிடம் சிகிரெட் வாங்க ரூ.10 தரும்படி சோனு கேட்டுள்ளார். ஆனால், பணம் தர முடியாது என சிறுவன் விஜய் கூறியுள்ளான். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் சோனு தனது நண்பர்களுடன் இணைந்து சிறுவன் விஜயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கொலை செய்த சோனு (20) மற்றும் நண்பர்களான பிரவீன் (20), அஜய் (23), ஜதின் (24) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.