தெலுங்கானாவின் கோட்டேபல்லி நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
தெலுங்கானாவின் கோட்டேபல்லி நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள கோட்டேபல்லி நீர்த்தேக்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உல்லாசப் பயணமாக 22 முதல் 28 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நீர்த்தேக்கத்திற்கு சென்றனர். அவர்களில் இருவருக்கு நீச்சல் தெரியாது. அவர்கள் நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
முதல் கட்ட விசாரணையில், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீர்த்தேக்கத்தில் அவர்களில் இருவர் நீந்திக் கொண்டிருந்ததாகவும், மற்ற இருவரும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியே வர முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.