ஒடிசா முன்னாள் சபாநாயகர் மறைவு

ஒடிசா முன்னாள் சபாநாயகர் சூரிய நாராயண பத்ரோ உடல்நலக்குறைவால் காலமானார்.

Update: 2023-09-02 17:55 GMT

புவனேஸ்வரம்,

ஒடிசா முன்னாள் சட்டசபை சபாநாயகர் சூரிய நாராயண பத்ரோ,75 உடல்நலக்குறைவால் காலமானார். ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வும் அம்மாநில சட்டசபை முன்னாள் சபாநாயகருமான சூரிய நாராயண பத்ரோ,75 கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்