பணமோசடி வழக்கில் ஜாமீன் கோரி சத்யேந்திர ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

பணமோசடி வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2023-05-15 07:13 GMT

புதுடெல்லி,

டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின், கடந்த 2022ம் ஆண்டு மே 30ம் தேதி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டு, தற்போது இந்த வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை அண்மையில் விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

வழக்கு முக்கிய கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு ஏற்படலாம் எனவும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) நிபந்தனைகளை அழிக்க முடியாது என நீதிபதி கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பணமோசடி வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு எதிரான பணமோசடி வழக்கில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்