சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி மரணம்

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம். அகமதி நேற்று காலமானார்.

Update: 2023-03-02 20:09 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஆஷிஸ் முசாபர் அகமதி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 90. குஜராத் மாநிலம் சூரத்தில் 1932-ம் ஆண்டில் பிறந்த இவர், ஆமதாபாத் கோர்ட்டில் நீதிபதியாக 1964-ம் ஆண்டு பதவியேற்றார்.

குஜராத் மாநிலத்தின் சட்டத்துறை செயலராக செயல்பட்ட அகமதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி 1988-ம் ஆண்டு வந்தது. 1994-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஆனார்.

சுப்ரீம்கோர்ட்டு சட்ட உதவிக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். அலிகார் பல்கலைக்கழக வேந்தராகவும் இருந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்