கள்ளக்காதல் பயங்கரம்...! கணவன், மாமியாரை வெட்டி துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்த பெண்...!

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது மாமியாரின் உடல் பாகங்கள் சில மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2023-02-22 07:52 GMT

கவுகாத்தி

அசாம் மாநிலத்தில் ஆறு மாதங்களுக்கு முன் நடந்த இரட்டை கொலையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று கவுகாத்தியில் தனது கணவர் மற்றும் மாமியாரைக் கொலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பந்தனா கலிதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்தப் பெண், தனது இரு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தனது மாமியார் சங்கரி டே (62) மற்றும் கணவர் அமர்ஜோதி டே ஆகியோரைக் கொலை செய்து உள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது மாமியாரின் உடல் பாகங்கள் சில மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பந்தனா கலிதா கடந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தனது மாமியாரையும், பின்னர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனது வேலையில்லாத கணவர் அமர்ஜோதி டேயையும் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலையில், அந்தப் பெண்ணுக்கு உதவியாக அவரது தோழியான டாக்சி டிரைவரான டான்டி டெகாவும், காய்கறிக் கடை நடத்தும் அருப் தேகாவும் உதவியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் உடல்களை துண்டித்து, உடல் உறுப்புகளை அப்புறப்படுத்த அண்டை மாநிலமான மேகாலயாவுக்கு இரண்டு முறை பயணம் செய்தனர். மேலும் இறந்த அமர்ஜோதியின் முதுகு தண்டுவடம் மற்றும் டி-சர்ட்டையும் டாவ்கியில் மற்றொரு இடத்தில் இருந்து போலீசார் மீட்டனர்.


மாமியார்- கணவர் கொலை

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர் பந்தனா கலிதா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் சங்கரி டேயை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக பந்தனாவிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.

அமர்ஜோதி வேலையின்றி இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராக சேர்ந்த பந்தனாவுக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் ஒரு நண்பருடன் கள்ளக்காதலிலும் ஈடுபட்டு உள்ளார்.

வேலைக்கு செல்ல வேண்டாம் என இவரது மாமியார் பந்தனாவை தடுத்துள்ளார். கடும் வாக்குவாதத்திற்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி பந்தனா தனது மாமியாரை கொலை செய்துள்ளார். நண்பர்களின் உதவியுடன் உடலை துண்டு துண்டாக வெட்டி 3 நாட்கள் பிரிட்ஜில் வைத்துள்ளார். இதன் பிறகு கார் மூலம் மேகாலயாவுக்குச் சென்று மலையில் இருந்து உடல் பாகங்களை இவரும் இவரது நண்பர்களும் வீசியுள்ளனர்.

பின்னர், இதே பாணியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி கணவரையும் கொலை செய்து, உடல் பாகங்களை அதே பகுதியில் உள்ள பள்ளத்தாக்குகளில் வீசியதும் விசாரணையில் தெரியவந்தது. 



Tags:    

மேலும் செய்திகள்