பெண்ணிடம் ரூ.2 லட்சம் நூதன மோசடி

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.௨ லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-09-13 16:29 GMT

பெங்களூரு:


பெங்களூரு வில்சன்கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி(வயது 26). இவரது தோழியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து ஒரு 'லிங்க்' ஸ்ரீதேவிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில், ஆன்லைன் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய ஸ்ரீதேவி ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தார்.

ஆனால் அவர் செய்த முதலீட்டுக்கு வட்டியோ, முதலீடு செய்த பணமோ திரும்பி வரவில்லை. இதுபற்றி தோழியிடம் விசாரித்த போது தான், தோழியின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி ஸ்ரீதேவிக்கு 'லிங்க்' அனுப்பி, இந்த மோசடியில் மா்மநபர்கள் ஈடுபட்டது தெரிந்தது. இந்த நூதன மோசடி குறித்து மத்திய மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்