பேரணியில் கலகலப்பு... பிரியங்கா காந்திக்கு வழங்கிய பூங்கொத்தில் பூக்கள் 'மிஸ்சிங்'..!! வைரலான வீடியோ

பிரியங்கா காந்திக்கு சிலர் ரோஜாக்களை வழங்கினர். வேறு சிலர் அவருடன் ஒன்றாக நின்று புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

Update: 2023-11-07 07:44 GMT

இந்தூர்,

மத்திய பிரதேசத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் நடந்த பேரணி ஒன்றில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். இந்த பேரணி காங்கிரசின் சமூக ஊடகத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

அப்போது, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பிரியங்கா காந்திக்கு பூங்கொத்து கொடுத்துள்ளார்.

ஆனால், அதனை வாங்கிய பிரியங்கா காந்திக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பூங்கொத்தில் ஒரு பூவை கூட காணவில்லை. அது காலியாக இருந்தது. இதனை பார்த்த அவர் மேடையிலேயே சிரித்து விட்டார். அவருடன் மற்றவர்களும் சேர்ந்து சிரித்து விட்டனர்.

அதுபற்றி வெளியான வீடியோவில், காங்கிரஸ் தலைவர்கள் பலர், ஒருவர் பின் ஒருவராக சென்று பிரியங்கா காந்திக்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். அவர்களை புன்னகையோடு வரவேற்று, அவர் திருப்பி அனுப்புகிறார்.

சிலர் அவருக்கு ரோஜாக்களை வழங்கினர். வேறு சிலர் அவருடன் ஒன்றாக நின்று புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். அப்போது ஒருவர், பூங்கொத்து கொண்டு வந்து கொடுக்கிறார்.

அதனை பார்த்த பிரியங்கா, பூக்கள் எங்கே? என அவரிடம் கேட்கிறார். சிரித்து கொண்டே அவர் பின்னால் சென்று மறைகிறார். இதனை கவனித்த கட்சி தொண்டர்கள் இடையே முணுமுணுப்பு ஏற்பட்டது.

எனினும், தொடர்ந்து பேரணியில் ஆளும் அரசை தாக்கி பேசினார். அவர், இந்த பேரணி பற்றி எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்ட செய்தியில், நீதி, வாய்மை மற்றும் நல்ல நிர்வாகம் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற, மகாராணி அகல்யாபாய் ஹோல்கரின் பூமி இந்தூர் நகரம்.

ஊழல் மற்றும் கெட்ட நிர்வாகம் ஆகியவற்றை ஒழித்து, இழந்த மதிப்புகளை மத்திய பிரதேசத்தின் மக்கள் மீட்டெடுப்பார்கள் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்