பெங்களூரு-சிட்னி இடையே நேரடி விமான சேவை
பெங்களூரு - சிட்னி இடையே நேரடி விமான சேவை தொடங்கி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு-சிட்னி இடையே நேரடி விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தை விமான நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். புதிய விமான சேவை குறித்து கன்டாஸ் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரு டேவிட் கூறும்போது, 'பெங்களூரு-சிட்னி இடையில் இயக்கப்படும் நேரடி விமானம் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். இந்த விமானம் பெங்களூருவில் இருந்து புதன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் இயங்கும்' என்று கூறினார். பெங்களூரு விமான நிலைய வளர்ச்சி அதிகாரி ரகுநாத் கூறும்போது, 'பெங்களூரு-சிட்னி இடையே நேரடி விமானம் இயக்கப்படுவது வரலாற்று சிறப்புமிக்க தருணம்' என்றார்.