மராட்டியத்தில் கார்-லாரி மோதி விபத்து: 5 பேர் பலி

விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Update: 2023-11-26 20:11 GMT

நாசிக்,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மன்மட்-யோலா சாலையில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் நாசிக் நகரைச் சேர்ந்தவர்கள்.

விபத்து நடந்த இடத்தில் மழை மற்றும் இருள் காரணமாக மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டதாக தெரிவித்த போலீசார், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்