நாகாலாந்து தேர்தல் பிரசாரத்தில் துப்பாக்கி சூடு: வாகனங்கள் சேதம்
நாகாலாந்து தேர்தல் பிரசாரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் வாகனங்கள் சேதமடைந்தன.
கோஹிமா,
நாகாலாந்து சட்டசபை தேர்தல் இம்மாதம் 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, அங்குள்ள திமாபுர்-2 சட்டசபை தொகுதிக்குட்பட்ட இன்டிசென் கிராமத்தில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) வேட்பாளர் விகேகோ அவோமியின் வாகனங்கள் பிரசாரத்துக்காக சென்றன.
அதே சமயத்தில், அந்த கிராமத்தில் உள்ள தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் மாதோஷி லாங்குமரின் வீட்டை நோக்கி அடையாளம் தெரியாத சில இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து லாங்குமரின் ஆதரவாளர்களுக்கும், லோக் ஜனசக்தி வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.
இதில், லோக் ஜனசக்தி வேட்பாளரின் 2 வாகனங்கள் சேதம் அடைந்தன. 2 பேர் லேசான காயம் அடைந்தனர்.