தேனீக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க கடலில் குதித்த மீனவர் பலி
தேனீக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க கடலில் குதித்த மீனவர் உயிரிழந்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உடுப்பு மாவட்டம் நடிபட்னா பகுதியை சேர்ந்த மீனவர் வாசுதேவ் சலியன் (வயது 65). இவர் நேற்று கடலுக்கு அருகே நின்று வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அவரை சூழ்ந்துகொண்ட தேனீக்கள் அவரை கொட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த வாசுதேவ் கடல் நோக்கி ஓடி கடலில் குதித்தார்.
கடலில் குதித்த வாசுதேவை அலைகள் இழுத்துச்சென்றன. இதில், அலைகள் இழுத்துசெல்லப்பட்ட வாசுதேவ் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.