முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி பயணம்?

இன்னும் ஒரிரு நாளில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி சென்று மேலிடத்தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Update: 2022-11-05 21:19 GMT

பெங்களூரு:- 

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 6 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் மந்திரிசபையில் 6 இடங்களில் காலியாக உள்ளது. அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கும், பா.ஜனதா மேலிடத்திற்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது குறித்தும் மந்திரிசபை மாற்றியமைக்கப்படுவது குறித்தும் டெல்லி சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம், சட்டசபை தேர்தல் உள்ளிட்டவை குறித்து டெல்லிக்கு சென்று பா.ஜனதா தலைவர்களை சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பா.ஜனதா மேலிட தலைவர்கள் அழைத்ததும் டெல்லி செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்