பட்டு வஸ்திரம் சாத்திய முதல்-மந்திரி: திருப்பதியில் கோலாகலமாக தொடங்கிய பிரம்மோற்சவம்.!!
பிரம்மோற்சவத்தையொட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சமர்ப்பித்தார்
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று இரவு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கினார். இதற்காக பேடி ஆஞ்சநேயசுவாமி கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்றார்.
அவரை அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர் ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் ஏ.வி.தர்மா ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். அதன்பிறகு அவர் கொடி மரத்துக்கு மாலை அணிவித்து, வகுளமாதா, விமான வெங்கடேஸ்வர சுவாமி, பாஷ்யகர்ல சந்நிதி மற்றும் யோக நரசிம்மசுவாமியை தரிசித்தார். தொடர்ந்து ரங்கநாயகுலா மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க அவருக்கு தீர்த்தபிரசாதம் வழங்கப்பட்டது.