ஐதராபாத் - ஹவுரா விரைவு ரெயிலில் புகை: பயணிகள் அச்சம்
ஐதராபாத்தில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த விரைவு ரெயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த விரைவு ரெயிலில் திடீரென புகை வந்ததால் வராங்கல் அடுத்த நெல்கொண்டா ரெயில் நிலையம் அருகே பாதுகாப்பு கருதி ரெயில் நிறுத்தப்பட்டது. ரெயில் நின்றதும் பயணிகள் அனைவரும் ரெயிலை விட்டு கீழே இறங்கினர். இந்த சம்பவத்தினால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் பழுதான ரெயில் சக்கரத்தின் பகுதியில் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். பழுது சரிசெய்யப்பட்டு ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. ரெயில் சக்கர பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.