மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் திடீர் 'தீ' விபத்து
மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் திடீர் ‘தீ’ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள கவர்னர் மாளிகை, தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இந்த மாளிகையின் 2-வது தளத்தில் உள்ள அறை ஒன்றில் நேற்று இரவு திடீரென தீ பிடித்தது. உடனே அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வீரர்கள், உடனடியாக தீயை அணைத்தனர். 5 நிமிடங்களுக்குள் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக இந்த சம்பவம நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கவர்னர் மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.