டெல்லி ரஜோரி கார்டன் பகுதியில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து!

தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-09-04 01:33 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள ஒரு பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் சுற்றுப்புறம் முழுவதும் புகை மண்டலமாக பரவியதால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.எனினும், தகவல் கிடைத்ததும் 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள எச்டிஎப்சி வங்கிக்கு அருகில் உள்ள விஷால் என்கிளேவ் என்ற இடத்தில் அதிகாலை 1.03 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த தீ விபத்தில் இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்பு சேவை அதிகாரி எஸ்.கே.துவா தெரிவித்தார்.தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்