டெல்லியில் ராணுவ ஆஸ்பத்திரியில் தீ விபத்து
டெல்லியில் ராணுவ ஆஸ்பத்திரியில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி,
டெல்லி நகரின் தென்மேற்கில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவத்தள ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் தெரிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆபரேஷன் தியேட்டர், தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றில் பரவிய தீ, அதிகாலை 5.30 மணியளவில் தீயணைப்பு படையினரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.