மியான்மர் சம்பவ வீடியோவை மணிப்பூரில் நடந்ததாக பரப்பியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மியான்மர் சம்பவ வீடியோவை மணிப்பூரில் நடந்ததாக பரப்பியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-07-25 18:52 GMT

கோப்புப்படம்

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி, குகி இனத்தவர்களுக்கு இடையிலான மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தாக்குதல், அத்துமீறல் நடந்ததாக சமூக ஊடகங்களில் வலம் வரும் தகவல்களும், வீடியோக்களும் பதற்றத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

அவ்வாறு, அண்டை நாடான மியான்மரில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ, மணிப்பூரில் நடந்ததாக பரப்பப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு பெண்ணை ஆயுதம் தாங்கிய ஆட்கள் உள்ளிட்ட கும்பல் தாக்கி கொலை செய்கிறது. இந்த வீடியோ வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பரப்பியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் தீய எண்ணத்திலும் இந்த வீடியோவை பரப்பியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என டுவிட்டரில் மணிப்பூர் போலீஸ் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்