யு.டி.காதர் எம்.எல்.ஏ. மீது எஸ்.டி.பி.ஐ. புகார்

யு.டி.காதர் எம்.எல்.ஏ. மீது எஸ்.டி.பி.ஐ. கட்சி புகார் செய்துள்ளது.

Update: 2023-04-14 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் வருகிற 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் விதிகளை மீறியதாக மங்களூரு தொகுதி எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான யு.டி.காதர் மீது எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. ஆனால் எம்.எல்.ஏ. யு.டி.காதர் மதம் சார்ந்த பகுதிகளில் பிரசாரம் செய்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். அந்த புகாரை ஏற்று கொண்ட தேர்தல் அதிகாரிகள், இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு செய்து விசாரணை நடத்தி, உறுதி செய்யப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். தேர்தல் நேரங்களில் இதுபோன் பிரசாரங்களால் பொது அமைதி சீர்குலையும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்