5 வயது மகனை கொடூரமாக தாக்கி பிறப்புறுப்பில் சூடு வைத்த தந்தை - அதிர்ந்து போன மருத்துவர்கள்

5 வயது மகனை ரத்தக்காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கிய தந்தை, சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்ரவதை செய்த கொடூரம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

Update: 2022-12-11 08:44 GMT

வயநாடு,

5 வயது மகனை ரத்தக்காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கிய தந்தை, சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்ரவதை செய்த கொடூரம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

வயநாட்டின் சுல்தான் பத்தேரியை சேர்ந்த உதயகிரி என்பவரது மனைவி உடலில் காயங்களுடன் இருக்கும் மகனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். சிறுவனின் கழுத்து, கை, வயிறு, முதுகு பகுதிகளில் ரத்தக்கட்டும், பிறப்புறுப்பில் சூடு வைத்த காயமும் இருந்ததால், அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளனர்.

அதில், சிறுவன் சேட்டை செய்ததால், அவரது தந்தை வயரால் அடித்து துன்புறுத்தியதுடன், சூடு வைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் புகார் அளித்ததால் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான சிறுவனின் தந்தையை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அறிக்கை அளிக்க குழந்தைகள் நல ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்