பஜ்பே அருகே மரத்தில் கார் மோதி தந்தை-மகள் பலி; 4 பேர் படுகாயம்

பஜ்பே அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-04 14:39 GMT

மங்களூரு;

மரத்தில் மோதி...

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ரானேபென்னூரை சேர்ந்தவர் புந்தலிகப்பா (வயது 62). இவரது மனைவி புஷ்பா. இந்த தம்பதிக்கு அஸ்வினி (29) என்ற மகள் உள்ளார். அஸ்வினிக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளாள். இந்த நிலையில் புந்தலிகப்பா தனது குடும்பத்தினருடன் மங்களூருவுக்கு காரில் சென்றார். காரை டிரைவர் ஓட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் மங்களூரு பஜ்பே போலீஸ் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

மேலும், சாலையில் தறிகெட்டு ஓடி மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அஸ்வினி சம்பவ இடத்திலேயே பலியானார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக பஜ்பே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

4 பேருக்கு சிகிச்சை

மேலும், விபத்தில் இறந்த அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை சிகிக்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே புந்தலிகப்பா இறந்துவிட்டார்.

உயிருக்கு போராடிய மற்ற 4 பேருக்கும் சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டிரைவர் அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்