புனே விரைவு சாலையில் பயங்கர விபத்து: அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதல்; பலர் காயம்

மும்பையில் இருந்து புனே செல்லும் விரைவு சாலையில் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி கொண்டதில் பலர் காயம் அடைந்து உள்ளனர்.

Update: 2023-04-27 09:21 GMT

புனே,

மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து புனே செல்லும் விரைவு சாலையில் இன்று கார், லாரி உள்பட 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். விபத்து நடந்ததற்கான காரணம் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

இந்த சம்பவத்தில் 3 சொகுசு கார்கள், ஒரு லாரி உள்ளிட்ட வாகனங்கள் பலத்த சேதமடைந்து உள்ளன. தகவல் அறிந்து சென்ற போலீசார், விபத்திற்கான காரணம் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகனங்களை அப்புறப்படுத்தி, சாலையை சீரமைப்பு செய்யும் பணியும் நடந்து வருகிறது. உடனடியாக அந்த பகுதிக்கு ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து, உயர் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்