பாம்பு கடித்து விவசாயி சாவு
உன்சூரில் பாம்பு கடித்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
மைசூரு:-
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா நாகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செலுவய்யா (வயது 48). விவசாாயி. இவர் நேற்று முன்தினம் தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது விளைநிலத்துக்குள் புகுந்த பாம்பு ஒன்று அவரை கடித்ததாக தெரிகிறது. இதனால், மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து மிட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செலுவய்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உன்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.