டெல்லி பிரான்ஸ் தூதரகத்தில் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை கண்டுகளித்த ரசிகர்கள்
மத்திய மந்திரி மீனாட்சி லேகி உள்பட நூற்றுக்கணக்கானோர் பிரான்ஸ் தூதரகத்தில் கால்பந்து இறுதிப் போட்டியை கண்டு ரசித்தனர்.
புதுடெல்லி,
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், மகுடம் சூடப்போகும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோதின. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்த இந்த போட்டியை இந்திய ரசிகர்களும் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர்.
அந்த வகையில் டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை ரசிகர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மீனாட்சி லேகி உள்பட நூற்றுக்கணக்கானோர் வருகை தந்து போட்டியை கண்டு ரசித்தனர்.