கன்னட போராளிகளுக்கு எதிரான பொய்யான வழக்குகள் திரும்ப பெறப்படும்; முதல்-மந்திரி சித்தராமையா
கன்னட போராளிகளுக்கு எதிரான பொய்யான வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதசார்பற்ற பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாக்கும் விவகாரத்தில் சமரசம் என்ற கேள்விக்கே இடமில்லை.
வெறுப்பு அரசியல் சகித்து கொள்ளப்படாது. அச்சம் நிறைந்த சூழல் களைந்தெடுக்கப்படும். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வி பிரிவில் கலப்படம் செய்யப்படுவது அனுமதிக்கப்படாது. புத்தகங்கள் மற்றும் பாடங்கள் என்று குழந்தைகளின் மனதில் தீங்கு ஏற்படுத்த கூடிய விசயங்கள் ஏற்று கொள்ளப்படாது.
குழந்தைகளின் கல்விக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காக, கல்வி ஆண்டு தொடங்கியதும், நாங்கள் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்.
கன்னட போராளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், தலித் இயக்கங்கள், இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களுக்கு எதிரான பொய்யான வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.