பணம் வசூல் செய்தபோது ரியல் போலீசிடம் சிக்கிய ரீல் போலீஸ்...!
டிராபிக் போலீஸ் பைக்கில் வந்தவர்களிடம் பணம் வசூலித்துக்கொண்டிருந்தார்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் டெஸ்புரா நகரில் உள்ள பருவாஷாரெய்லி பகுதியில் டிராபிக் போலீசார் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, டிராபிக் போலீஸ் உடையணிந்து பஸ்சில் வந்த ஒரு நபர் சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த சக டிராபிக் போலீசிடம் தான் மூத்த அதிகாரி என கூறியுள்ளார்.
இதை நம்பிய சக டிராபிக் போலீசார் அந்த நபர் அருகே நின்றுள்ளனர். இதையடுத்து, அவ்வழியாக வந்த பைக் உள்பட வாகன ஓட்டிகளை இடைமறித்து சாலை விதிகளை மீறியதாக அந்த நபர் அபராதம் என்ற பெயரில் பணம் வசூலிக்க தொடங்கியுள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த பிற டிராபிக் போலீசார் அது குறித்து அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மூத்த டிராபிக் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் டிராபிக் போலீஸ் போல நடத்து வாகன ஓட்டிகளிடம் பண வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரீல் டிராபிக் போலீசை ரியல் போலீசார் கைது செய்தனர்.