கடும் வெப்பம் எதிரொலி: திரிபுரா மாநிலத்தில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை
திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கானப்படுகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர்.
மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை அடுத்த சில நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கானப்படுகிறது. கடும் வெயில் எதிரொலியாக திரிபுராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஏப்.23-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக திரிபுரா அரசு அறிவித்துள்ளது.