ஒடிசா வனப்பகுதியில் வெடிகுண்டு கிடங்கு கண்டுபிடிப்பு

ஒடிசா வனப்பகுதியில் வெடிகுண்டு கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-26 22:47 GMT

மல்கான்கிரி,

ஒடிசாவின் சிறப்பு காவல் படைப்பிரிவு உள்ளடங்கிய அதிரடிப்படை பிரிவினர், பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையின்போது, வெடிமருந்து கிடங்கு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். துளசி பகத் என்ற கிராமத்தின் வனப்பகுதியில் இந்த வெடிகுண்டு கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து ஏராளமான நவீன மின்னணு குண்டுகள் மற்றும் மின்னணு குண்டுகள் தயாரிக்க உதவும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மற்றொரு நிகழ்வாக, மல்கான்கிரி மாவட்டத்தில் 3 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் போலீசாரிடம் சரண் அடைந்து உள்ளனர். அவர்கள், தலைக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்