முன்மாதிரியாக திகழ்ந்த வாக்காளர்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் கர்ப்பிணிகள், தாய்மார்கள், இளம்பெண்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர். அதன் விவரம் பின் வருமாறு:-

Update: 2023-05-10 20:36 GMT

* கதக் டவுனில் 85-வது எண் வாக்குச்சாவடியில் குழந்தை பெற்றெடுத்த 10 நாளே ஆன நிலையில் பெண் ஒருவர் வாக்களித்து தனது வாக்குரிமையை நிறைவேற்றினார்.

* பெங்களூரு நெலமங்களாவில் உள்ள 175-வது எண் வாக்குச்சாவடியில் மாதுரி என்ற பெண் தலைமையில் 20 பாலியல் தொழிலாளிகள் வந்து ஓட்டுப்போட்டனர்.

* குடகு மாவட்டம் மடிகேரி டவுன் காவேரி ஹால் பகுதியை சேர்ந்த ஆஷிகா என்ற பெண் தனது 4 மாத குழந்தையுடன் அங்குள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் ஓட்டுப்போட்டார்.

* இளம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்குச்சாவடிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி பாகல்கோட்டையில் உள்ள 34-வது எண் வாக்குச்சாவடியில் இளம்பெண்களும், வாலிபர்களும் வாக்களிக்க குவிந்தனர். அந்த வாக்குச்சாவடியில் சாலையின் இருபுறமும் இளம்பெண்கள், வாலிபர்கள் தனித்தனி நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

* மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி பெற்றோருடன் வந்து வாக்களித்தனர்.

* பீதர் டவுன் பழைய நவடாகி பகுதியில் திருமணம் முடிந்த கையோடு மணமகன் கார்த்திக் படேல் தனது பெற்ேறாருடன் வந்து ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

* காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா தொட்டலனஹள்ளி கிராமத்தில் வாக்களித்தார். முன்னதாக அவர், வாக்காளர்களை ஆட்டோவில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தார்.

* பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள நிசர்கா கார்டன் ஓட்டலில் நேற்று வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களுக்கு இலவசமாக நெய் தோைச, மைசூரு பாகு, ஜூஸ் வழங்கப்பட்டது.

* பெங்களூரு பெல்லந்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் 9 மாதம் கர்ப்பிணியான சிம்ரன் சிருஷ்டி (வயது 32) தனது தாயுடன் வந்து வாக்களித்தார்.

* துமகூரு டவுனில் ரெயில் நிலைய ரோட்டில் உள்ள வாக்குச்சாவடியில் படுத்தப்படுக்கையாக ஸ்டிரெச்சரில் வந்து சாம்பகி ராமு என்பவர் மனைவியுடன் வந்து வாக்களித்தார். சாம்பகி ராமு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஆம்புலன்சில் வந்து அவர் வாக்களித்தார்.

* பெங்களூரு சி.வி.ராமன் நகர் தொகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் கண் பார்வையற்ற தம்பதிகளான மகேஷ்- ராஜலட்சுமி, சிவராஜ்-ஆஷா ஆகியோர் வாக்களித்தனர்.

* பெங்களூரு ராஜராஜேஸ்வரி தொகுதிக்கு உட்பட்ட திலக் நகரை சேர்ந்த சேஷாத்திரி (வயது 40) சிறுநீரக பிரச்சினையால் சாகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நேற்று டாக்டர்கள், செவிலியர்களுடன் ஆம்புலன்சில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்