காபி தோட்டத்திற்குள் புகுந்து 11 காட்டுயானைகள் அட்டகாசம்
மூடிகெரே அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்து 11 காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிக்கமகளூரு;
காட்டுயானைகள் அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா வசத்தாரே அருகே முள்ளண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதிைய ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் அதேப்பகுதியை சேர்ந்த விவசாயி சரண் லட்சுமண்கவுடா என்பவருக்கு காபி தோட்டம் உள்ளது. நேற்றுமுன்தினம் வனப்பகுதியில் இருந்து 11 காட்டுயானைகள் இரைதேடி சரண் லட்சுமண் கவுடாவின் காபிேதாட்டத்திற்குள் புகுந்துள்ளது. பின்னர் அவைகள் அங்கிருந்த காபி செடிகளை மிதித்தும், தும்பிக்கையால் பிடுங்கி எறிந்தும் நாசப்படுத்தியது.
இதற்கிடையே சரண், தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது காட்டு யானைகள், தோட்டத்திற்குள் புகுந்து காபி செடிகளை நாசப்படுத்தி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கிராம மக்கள் கோரிக்கை
இதையடுத்து அவர் தனது செல்ேபானில் காட்டுயானைகளை புகைப்படம் எடுத்து அதனை வனத்துறையினரிடம் காண்பித்தார்.
மேலும் கிராம மக்கள், வனத்துறையினரிடம் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக உள்ளதாகவும், எனவே வனப்பகுதியில் காட்டுயானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளனர்.