என்ஜினீயர் வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை, பணம் திருட்டு

என்ஜினீயர் வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை, பணம் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-06-23 17:02 GMT

மைசூரு: மைசூரு தாலுகா மூக்கனஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா. இவர் பொதுப்பணி துறையில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் தனது சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார். அப்போது அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.2½ லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதற்கிடையே வீடு திரும்பிய சந்திரா ஜன்னல்கள் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்தார். மேலும் பீரோவில் இருந்த ரூ.6½ லட்சம் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடுபோய் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அப்போது தான் அவருக்கு, மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஜெயப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்