காரைக்காலில் பணி நியமனம் பெற்று புதுச்சேரியில் பணிபுரியும் பணியாளர்கள் - கலெக்டர் அதிரடி உத்தரவு

காரைக்காலில் பணி நியமனம் பெற்று புதுச்சேரியில் வேலை செய்பவர்களின் பெயர் பட்டியல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-10 17:50 GMT

காரைக்கால்,

காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணிநியமனம் பெற்று புதுச்சேரி மருத்துவமனையில் வேலை செய்பவர்களின் பெயர் பட்டியல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள், மருத்துவர்கள், மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில் காரைக்கால் மருத்துவமனையில் பணி நியமனம் பெற்ற 3 சிறப்பு மருத்துவர்கள், 2 மகப்பேறு மருத்துவர்கள், 2 மகப்பேறு உதவியாளர்கள், 33 தலைமை செவிலியர்கள் மற்றும் லிப்ட் ஆப்பரேட்டர் உள்ளிட்ட 43 பேர் புதுச்சேரியில் பணியாற்றுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து காரைக்காலில் உடனடியாக அவர்கள் பணிக்கு சேர வேண்டும் எனவும், அப்படி பணிக்கு வராதவர்களுக்கு இம்மாத சம்பளத்தை விடுவிக்க கூடாது என மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், மாவட்ட கருவூல அலுவலருக்கு பரிந்துரை செய்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்