டெல்லியில் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து - ரெயில்வே போலீசார் விசாரணை
டெல்லியில் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
புதுடெல்லி,
டெல்லியில் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. டெல்லியில் பைரோன் மார்க் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் அருகே ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சார ரெயில் தடம் புரண்டதில் ஒரு பெட்டி கடும் சேதமடைந்துள்ளது.
ரெயில் தடம் புரண்டதை அடுத்து ரெயிலில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மின்சார ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.