பெங்களூருவில், ஆட்டோவில் ரூ.1 கோடி சிக்கியது குறித்து வருமான வரித்துறை விசாரணையை தொடங்கியது

பெங்களூருவில், ஆட்டோவில் ரூ.1 கோடி சிக்கியது குறித்து வருமான வரித்துறை விசாரணையை தொடங்கியது.

Update: 2023-04-17 18:45 GMT

பெங்களூரு:

சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளதால் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாநகராட்சி அலுவலகம் அருகே கடந்த வாரம் பழுதாகி நின்ற ஆட்டோவில் ரூ.1 கோடி ரொக்கம் சிக்கி இருந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.1 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பிரவீன் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேர் மீதும் எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து எஸ்.ஜே.பார்க் போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, ரூ.1 கோடி சிக்கியது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த பணம் யாருடையது, எதற்காக 2 பேரும் எடுத்து சென்றனர், முறையாக வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி உள்ளனர். இதற்காக பிரவீன், சுரேஷ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி, ஆவணங்களை தாக்கல் செய்யவும் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். ரூ.1 கோடி ரொக்கம் ஒரு அரசியல் கட்சியின் பிரமுகருக்கு சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இதனால் அந்த நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்