32 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் 32 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

Update: 2023-04-08 21:07 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களில் 32 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் பா.ஜனதாவில் அதிகபட்சமாக 22 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் மீதும், ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 4 மீதும், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் 6 எம்.எல்.ஏ.க்கள் மீது 9 கிரிமினல் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பல்லாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜி.சோமசேகர ரெட்டி மீதான கிரிமினல் வழக்கு 16 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தபடியாக மந்திரி ஸ்ரீராமுலு மீதான கிரிமினல் வழக்கு 14 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்