தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் கட்சிகளின் சின்னம் மட்டுமே உள்ளது. தேர்தல் ஆணையத்தைக் கலைக்க வேண்டும். தேர்தல் ஆணையக் குழுவை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Update: 2023-02-20 11:12 GMT

மும்பை,

கடந்த வெள்ளிக்கிழமை ஏக்நாத் ஷிண்டே தரப்புதான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்தது. கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து உத்தவ் தாக்கரே தரப்பினர் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உத்தவ் தாக்கரே, தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், 'என்னிடமிருந்து எல்லாம் திருடப்பட்டது. எங்கள் கட்சியின் பெயரும் சின்னமும் திருடப்பட்டுவிட்டது. ஆனால், தாக்கரே என்ற பெயரை திருட முடியாது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு நாளை முதல் விசாரணைக்கு வருகிறத" என்றார்,

Tags:    

மேலும் செய்திகள்