"எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றை தலைமை" - தீர்மானம் நிறைவேற்றிய புதுச்சேரி அ.தி.மு.க.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொது.செயலாளராக தேர்வு செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரி மாநில அ.தி.மு.க.வி.ல் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யவேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். புதுச்சேரி கிழக்கு மாநில மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொது.செயலாளராக தேர்வு செய்ய வலியுறுத்தி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க .தொண்டர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கழகத்தின் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்வது என புதுச்சேரி மாநில கழகம் முடிவெடுத்துள்ளது" என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அது குறித்து பேட்டி அளித்த அவர் கூறியதாவது;-
இரட்டைத் தலைமையால் கட்சியின் பல்வேறு முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே கட்சி வேகமாக செயல்பட ஒற்றைத் தலைமை தேவை, இதில் தி.மு.க.வை உறுதியாக எதிர்த்து வரும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையாக இருக்க வேண்டும்.
அ.தி.மு.க.பாராளுமன்ற உறுப்பினர் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்தது, அவர்கள் செயல்பாடு நன்றாக இருக்கிறது எனக் கூறியது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த விடாமல் நீதிமன்றம் மூலம் தடை பெற நினைப்பவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள். அவர்கள் கட்சியில் இருந்து விளக்கப்பட வேண்டும், என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஆதரவு வலுவாக உள்ள நிலையில் தற்போது புதுச்சேரி திமுகவுன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.