உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு

உத்தரகாண்டில் இன்று காலை ரிக்டரில் 4.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

Update: 2023-10-16 05:20 GMT

பித்தோராகார்,

உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டம் அருகே இன்று காலை 9.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி இருக்கிறது.

இந்நிலநடுக்கம் பித்தோராகாரில் இருந்து 48 கி.மீ. வடகிழக்கே உணரப்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து இருக்கிறது.

கடந்த 5-ந்தேதி உத்தரகாண்டின் உத்தர்காஷி மாவட்டத்தில் ரிக்டரில் 3.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அது அதிகாலை 3.49 மணியளவில் உணரப்பட்டது. நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்