மந்திரி மகாதேவப்பா தலைமையில் தசரா கமிட்டி ஆலோசனை

மைசூருவில் மந்திரி மகாதேவப்பா தலைமையில் தசரா கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-23 18:45 GMT

மைசூரு

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாட முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கர்நாடகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் அணைகள் முழுமையாக நிரம்பாமல் உள்ளது. இதனால் மாநிலத்தில் 195 தாலுகாக்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த நிலையில், மைசூரு தசரா விழாவை இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

நேற்று தசரா விழா கொண்டாட்டம் குறித்து மைசூரு அரண்மனை மண்டலி அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா தலைமையில் தசரா கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தசரா விழா எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

மேலும், தசரா விழாவை எளிமையாக கொண்டாடினாலும், மின்விளக்கு அலங்காரம், மலர் கண்காட்சி, தசரா பொருட்காட்சி, விளையாட்டு போட்டிகள், புத்தக கண்காட்சி, உணவு மேளா, இளைஞர் தசரா, விவசாய தசரா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும்.

எளிமையாக நடந்தாலும் கலாசாரம், பாரம்பரியத்தை எடுத்து காட்டும் வகையில் தசரா விழா கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்