சம்பள பணத்தை கொடுக்காததால்; முதியவரை கத்தியால் குத்தி கொலை; மகன் படுகாயம்

சம்பள பணத்தை திருப்பி கொடுக்காததால் முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் முதியவரின் மகனும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-08-28 15:21 GMT

சிவமொக்கா;


கட்டிட பணி

சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா சிராளகொப்பா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் தயானந்த் (வயது 69). அவர் டவுன் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டி வந்தார். அந்த கட்டிட பணிகளை அவர் சொரப் தாலுகா சன்னாபுரா பகுதியை சேர்ந்த கொட்டரேஷ் என்பவரிடம் கொடுத்து இருந்தார்.

இதற்காக அவர் கொட்டரேசின் பணம் கொடுத்து இருந்தார். ஆனால், கொட்டரேஷ் அந்த பணிகளை சரியாக செய்து வரவில்லை என தெரிகிறது. இதனால் தயானந்த், கொட்டரேசை வேலையை செய்ய வேண்டாம் என கூறினார். ஆனால் அவருக்கு வேலைக்கான சம்பள பணத்தை தயானந்த் கொடுக்கவில்லை என தெரிகிறது.

கத்திகுத்து

இதையடுத்து கொட்டரேஷ், தான் இதுவரை செய்த வேலைக்கு சம்பளத்தை தருமாறு தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால், தயானந்த் அந்த பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கொட்டரேஷ் சிராளகொப்பா டவுனில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கு தயானந்த்தை சந்திக்க சென்றார்.

அங்கு சென்ற அவர், தயானந்த்திடம் மறுபடியும் பணத்தை கேட்டுள்ளார். அப்ேபாது அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கொட்டரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தயானந்த்தை சரமாரியாக குத்தி உள்ளார். இதை தடுக்க வந்த தயானந்த்தின் மகனான ராகவேந்திராவையும் (40) கத்தியால் குத்தினாா். இதில் இருவரும் பயங்கர கத்திகுத்து காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

கைது

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், இருவரையும் மீட்டு சிராளகொப்பா அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தயானந்த் பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் ராகவேந்திரா மேல் சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிராளகொப்பா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ேபாலீசார் குற்றவாளியான கொட்டரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்